கோவையில் ஓவர் குடிபோதையில் தொழிலாளி பலி

67பார்த்தது
கோவையில் ஓவர் குடிபோதையில் தொழிலாளி பலி
கோவை தொட்டிபாளையம் பிரிவு அண்ணாநகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(39). கூலி தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடைய அவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் போதை தலைக்கேறி பீளமேடு அழகு நகரில் உள்ள பேக்கரி அருகே மயங்கி கிடந்தார். 

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிக மது போதையில் பொன்னுசாமி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி