
கோவை: நகைச்சுவை பாணியில் ரவி மரியா பிரச்சாரம்
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கொள்ளுப்பாளையத்தில், அதிமுக வேட்பாளர் வி. பி. கந்தசாமிக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தனது நகைச்சுவை பாணியில் பேசிய அவர், மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முன்னாள் முதல்வர் அம்மா செயல்படுத்திய நலத்திட்டங்களை நினைவில் வைத்து வாக்களிக்குமாறும் வலியுறுத்தினார். இந்த கலகலப்பான பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

































