கோவை: மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை

609பார்த்தது
கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன், சக நண்பர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையில் நண்பர்களுடன் சென்ற மாணவன் வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த இரு சிறுவர்கள் மதுபாட்டிலால் தாக்கி கொன்றதும், உடலை குழிதோண்டிப் புதைத்ததும் தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இரண்டு சிறுவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி