கோவை: உக்கடம் பஸ் நிலையத்தில் தவித்த 2 மாணவிகள் மீட்பு

469பார்த்தது
கோவை: உக்கடம் பஸ் நிலையத்தில் தவித்த 2 மாணவிகள் மீட்பு
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நேற்று தனியாக தவித்த 17 மற்றும் 14 வயதான அக்காள்-தங்கையை பெண் போலீசார் ரோந்து பணியின் போது கண்டுபிடித்து மீட்டனர். பெற்றோர் திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவிகள் தெரிவித்தனர். போலீசார் வாளையாறு போலீஸ் உதவியுடன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் மாணவிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி