கோவை: 21 கிலோ கஞ்சா பறிமுதல்; உத்தரப்பிரதேச நபர் கைது

51பார்த்தது
கோவை: 21 கிலோ கஞ்சா பறிமுதல்; உத்தரப்பிரதேச நபர் கைது
கோவை மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று (ஜூன் 4) கைது செய்யப்பட்டுள்ளார். 

மாநகர காவல் ஆணையர் சரவணன் சுந்தர் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (தெற்கு) உதயகுமார் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், செல்வபுரம் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையிலான தனிப்படை தெலுங்குபாளையம் வேடப்பட்டி சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டது. 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அமன்சிங் என்பவரைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, 21 கிலோ கஞ்சா, 26000 ரூபாய் பணம், இரண்டு டிஜிட்டல் எடை இயந்திரங்கள் மற்றும் கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அமன்சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி