கோவை–கேரளா எல்லையான வேலந்தாவளத்தில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற முனீர் (40) என்பவரிடம் இருந்து ரூ. 25.50 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனீர், கோவையில் தங்கம் விற்று அந்தப் பணத்தை கேரளாவுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறினார். பணம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, முனீர் கைது செய்யப்பட்டார். ரொக்கப் பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.