கோவை: 36 பவுன் நகை திருட்டு; பணியாளர் உட்பட 2 பேர் கைது

62பார்த்தது
கோவை: 36 பவுன் நகை திருட்டு; பணியாளர் உட்பட 2 பேர் கைது
கோவை ஆர். எஸ். புரம் கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம்(90). தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் கோவை வீரகேரளத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மனைவி கவிதா(38) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், வீட்டு பீரோவில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடு போனது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிவசுப்பிரமணியம் இது குறித்து ஆர். எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வீட்டு வேலைக்காரப் பெண் கவிதா என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கவிதா கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை ரூ. 28 லட்சம் மதிப்பிலான 36 பவுன் நகையை திருடி சென்றதும், இவருக்கு பூ மார்க்கெட் தெப்பகுளம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(53) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி