தொண்டாமுத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

520பார்த்தது
தொண்டாமுத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பேரூர், தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இ. பி. அலுவலக வீதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கிடமாக சூதாடிக் கொண்டிருந்த அங்கடசாமி (75), ஆனந்தகுமார் (33), செல்வம் (48), வெங்கடேஷ் (29), சேகர் (49) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ. 2,020 பணத்தையும் சீட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி