கோவை: சாலையோரம் வளர்ந்து நிற்கும் கஞ்சா செடி!

15பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் கஞ்சா செடி வளர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர நடைபாதை கீழ்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த செடியை பொதுமக்கள் கவனித்து, அது கஞ்சா என அடையாளம் கண்டனர். இளைஞர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட செடி வளர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, செடியை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி