கோவை: நள்ளிரவில் வங்கி ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி

578பார்த்தது
கோவைபுதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் திருஞானசம்பந்தம் வீட்டில் நேற்று நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது. உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், மேல் மாடியில் இருந்த மகன் தென்னை மர கிளை அசையும் சத்தம் கேட்டு வெளியே பார்த்தபோது, இருவர் பூட்டை உடைக்க முயன்றதை கண்டார். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை கண்டு இருவரும் தப்பியோட முயன்றனர். இதில் உடுமலையை சேர்ந்த சூர்யா என்பவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி