கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டு உரையாற்றினார். சக்தி கேந்திர நிர்வாகத்தின் வலுவான செயல்பாடுகளால் நாடு முழுவதும் பாஜக தேர்தல் வெற்றிகளைப் பெற்று வருவதாகவும், எட்டு மாவட்டங்களில் இருந்து திரண்டுள்ள பொறுப்பாளர்களின் எழுச்சி வரும் தேர்தலில் திமுகவை தோல்வியடையச் செய்யும் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததை நினைவுகூர்ந்த நிதின் நபின், சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் பயணித்து, திமுகவை வீழ்த்த அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.