சூலூர் சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில், சிறுமியின் உடல் தாய்க்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் அவசரமாக எரிக்கப்பட்டதாக சித்தி மற்றும் உறவினர்கள் இன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடற்கூறாய்வுக்குப் பிறகு தந்தையிடம் மட்டும் பேசி உடலை எடுத்துச் சென்றதாகவும், தாயை இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். மறு உடற்கூறாய்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிறுமியின் தாய்க்கு அரசு
வேலை மற்றும் உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.