கோவை இருகூரை சேர்ந்த ஹரி, தனது மற்றும் தாயாரின் இன்சூரன்ஸ் பாலிசியை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற முயன்றார். இதற்காக ரூ. 12,083 செலுத்தியும் பாலிசி புதுப்பிக்கப்படாததால், புதிய நிறுவனத்திற்கும் மாற்ற முடியவில்லை. இதுகுறித்து கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், சேவை குறைபாட்டிற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு மற்றும் ரூ. 5 ஆயிரம் வழக்கு செலவை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.