கோவை: வாட்ஸ்-அப் குழுவில் அவதூறு; போலீசில் புகார்

73பார்த்தது
கோவை: வாட்ஸ்-அப் குழுவில் அவதூறு; போலீசில் புகார்
தி. மு. க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா குறித்து வாட்ஸ்-அப் குழுவில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு மாவட்ட தி. மு. க. சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வைட் பாபு என்ற எஸ். முகமது ரபி இன்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் இப்புகாரை அளித்தார். இப்புகார் அளிக்கும்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி