கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அவசரமாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் பலத்த சிரமப்பட்டு தீயை அணைத்தனர். இதனால் குடோனில் இருந்த பெருமளவு பொருட்கள் தீக்கிரையாவது தவிர்க்கப்பட்டு, பெரும் சேதம் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.