கோவை: கஞ்சா கடத்தல்: ஐஷர் லாரியில் வந்த இருவர் கைது!

0பார்த்தது
கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று நள்ளிரவில் சுங்கம்–ராமநாதபுரம் பகுதியில் வாகன சோதனையின் போது, ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து ஐஷர் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் லாரி தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பீளமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் நாமக்கல் டிரைவர் அருண்குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி