கோவை: அரசு–தனியார் பேருந்துகள் மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்

0பார்த்தது
கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இடையே ஏற்பட்ட வேகப் போட்டி காரணமாக நேற்று விபத்து ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தை முந்த முயன்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவத்தை அப்பகுதி இளைஞர்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கோவை–மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் தினசரி அதிக அளவில் பேருந்துகள் இயங்குவதால், நேரம் மற்றும் பயணிகள் ஏற்றத்தில் போட்டி நிலவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி