கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளி திலீபன் (37) குத்திக்கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை அன்பு எஸ்தர் (37) வீட்டிற்கு சென்றிருந்த அவரை, பிரேமானந்த் (54) கத்தியால் பல இடங்களில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற அன்பு எஸ்தரும் காயமடைந்தார். பின்னர் வீடு வெடிக்க முயன்ற பிரேமானந்த் தீக்காயமடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.