கோவை: வீடு விவகாரம்: தனியார் நிதி நிறுவனம் மீது புகார்

1பார்த்தது
கோவை துடியலூர் அருகே ஜி. என். மில் பகுதியில் வசிக்கும் பத்மநாபன் என்பவரின் 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு அடுக்குமாடி வீடு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சந்திரசேகரிடம் 44.5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, மேலும் கடன் தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 13, 2025 அன்று 25 பேர் கொண்ட குழு வீட்டுக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பொருட்களை வெளியேற்றி வீட்டை கைப்பற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பத்மநாபன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி