கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தில் தீவிர சோதனை!

376பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் போது கத்தி, புகையிலை பொருட்கள், தீப்பெட்டி, பூச்சிக்கொல்லி மற்றும் இருசக்கர வாகன ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெண்கள் கொண்டு வந்த அழகு சாதனப் பொருட்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வைக்கப்பட்டு, மனுக்கள் அளித்த பின் திருப்பி வழங்கப்பட்டன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி