கோவை: சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா

2பார்த்தது
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கத்தி போடும் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. சித்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டபோது, சிறுவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூர்மையான கத்திகளால் தங்களை காயப்படுத்திக் கொண்டு, கைகளிலும், மார்பிலும், முதுகிலும் ரத்தம் சொட்ட அம்மனை சுமந்து வந்தனர். 'வீசுக்கோ, தீசுக்கோ' என்ற கோஷங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.