கோவை: முதல் நாளே நண்பனை கொலை செய்தவர் கைது

881பார்த்தது
கோவை தடாகம் அருகே ராகவன் என்ற நபர் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் கடந்த 2ம் தேதி மதுக்கடையில் சந்தித்து நண்பர்களான பிறகு, தடாகம் தண்ணீர் பந்தல் பகுதியில் மது அருந்தியபோது, ராகவன் முழு மதுவையும் குடித்ததால் ஏற்பட்ட தகராறில், சரவணன் செங்கலால் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். சரவணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி