கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் 3,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன
மாஸ்டர் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சென்டர் நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்த இம்மையத்தில், 1500-க்கும் மேற்பட்ட CCTV மற்றும் ANPR கேமராக்கள் ஒரே கட்டுப்பாட்டில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. டயல்-100, சைபர் கிரைம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், குற்றத் தடுப்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் மேலும் துரிதமாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.