கோவை: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

78பார்த்தது
கோவை: கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கோவை சாய்பாபா காலனி என். எஸ். ஆர். சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில், 20 வயதான கல்லூரி மாணவர் பிரனேஷ் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். விபத்து நிகழ்ந்ததும் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்த கண்ணன் (50) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி