கோவை, மேட்டுப்பாளையம் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த குணா (23) என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சரவணன் (33) மற்றும் பாபு (36) மீது குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயல்களில் ஈடுபட்டதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார். க. கிரியப்பனவர் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள அவர்களிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.