கோவை: பொன்முடி சாலை திறப்பு - துணை முதல்வர் திறந்து வைப்பு

1பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் புதிதாக பெயரிடப்பட்டுள்ள எஸ்.எஸ். பொன்முடி சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சாலைக்கு எஸ்.எஸ். பொன்முடி பெயர் சூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள், பேரூராட்சித் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து துணை முதல்வர் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி