கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்து, அரசு மதுபான கடைகள் மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள கடைகளை மூடும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், பணியிழக்கும் ஊழியர்களுக்கு மாற்று அரசு
வேலை வழங்க வேண்டும் என கோரினர். மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு உடனடியாக அமைச்சரை நியமிக்கவும் வலியுறுத்தினர்.