கோவை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - மகளிர் ஆணைய தலைவர்!

0பார்த்தது
கோவை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - மகளிர் ஆணைய தலைவர்!
கோவையில் தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது நண்பரையும் மருத்துவமனையில் சந்தித்து விசாரித்தார். மாணவிக்கு பாதுகாப்பும் மனநல ஆலோசனையும் வழங்கப்படுவதாகவும், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதல்வர் ஒரு மாத காலத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்து தைரியமாக புகார் அளிப்பதாகவும் அவர் கூறினார். பொள்ளாச்சி வழக்குடன் ஒப்பிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையை காக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி