கோவை ரயில் நிலையத்தில், கொல்கத்தாவிலிருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய கேரளாவை சேர்ந்த அமுல் (27) மற்றும் விஷ்ணு (34) ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், செல்வபுரம் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் கல்லாமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சூர்ய பிரகாஷ் (25), கார்த்திகை செல்வம் (26) ஆகியோரையும், கோவைப்புதூர் பகுதியில் கஞ்சா விற்ற பாசில் (28) என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 200 கிராம் மற்றும் 2 கிலோ 100 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.