நேபாளத்தின் ரங்கசாலா மைதானத்தில் நவம்பர் 4 முதல் 8 வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான இன்டோ–நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டியில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த வருண் தற்காப்பு கலைக்கூடம் மாணவர்கள் 7 பேர் சிலம்பம் பிரிவில் பங்கேற்று 10 தங்கப்பதக்கங்களையும் 4 கோப்பைகளையும் வென்று முதல் இடத்தை பிடித்தனர். நேபாளத்திலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.