கோவை கருமத்தம்பட்டியில், ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனமான ZF நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை திறக்கப்பட்டது. ரயில்வே மற்றும் கட்டுமான துறைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் இந்த தொழிற்சாலையை, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.
விழாவில் அவர் உரையாற்றிய போது, தமிழ்நாடு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக உள்ளதாகவும், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனிக்கு விரைவில் செல்லவுள்ளதாகவும் கூறினார். உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி நிறுவனங்களை ஈர்ப்பதில் கோவை முக்கியப் பங்காற்றுவதாகவும், மாநிலத்தில் 43% உழைக்கும் சக்தி உள்ளதைக் குறிப்பிட்டார்.