நாமக்கல் மாவட்ட தொழிலதிபர் பயாஸ் அஹமத், 2015-16 நிதியாண்டில் ₹48 கோடி வருமானத்தைக் காட்டியும் வரி செலுத்தாதது நிரூபிக்கப்பட்டது. கோவை சி.பி.ஐ நீதிமன்றம் நேற்று அவருக்கு ₹24.8 கோடி அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.