கோவை: இருசக்கர வாகனம் திருடியவர் கைது

832பார்த்தது
கோவை: இருசக்கர வாகனம் திருடியவர் கைது
கோவை தீத்திபாளையம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த கனகராஜ் (32) லாலி ரோட்டில் உள்ள பேக்கரி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது வாகனம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (28) என்பவரைக் கைது செய்து, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை நேற்று பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி