கோவை வைசியாள் வீதியைச் சேர்ந்த விஜயகுமாரி (45) என்பவர் நேற்று துணி காயப்போடும்போது எதிர்பாராதவிதமாக 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருகிறார். நேற்று சிவகாமி வீட்டில் துணிகளைத் துவைத்து தனது வீட்டின் முன்பு உள்ள தடுப்புச் சுவரில் காயவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.