கோவையில் பெண்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 'Her Voice For Her Education' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி சங்கனூரில் நேற்று நடைபெற்றது. பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.