கோவை பாப்பாநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(40). தனியார் ஊழியர். இவர் நேற்று காய்கடை பேருந்து நிறுத்தம் அருகே நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றார். இதனை பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் பறிக்க முயன்றது பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த ராகுல்(25) என்பது தெரியவந்தது.