“கள்ளச்சந்தை மது விற்றால் காவல் நிலையம் முற்றுகை!
கோவை கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ், தனது தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதாக உறுதி அளித்துள்ளார். சுந்தராபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று பொதுமக்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால், பொதுமக்களை திரட்டி காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன் என எச்சரித்துள்ளார். மது மற்றும் போதைப்பொருள் இல்லாத தொகுதியாக கிணத்துக்கடவை மாற்றுவதே தனது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.
