காரமடை அருகே, 24 வயது வாலிபர் ஒருவர், 18 வயது கல்லூரி மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்தார். மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த வாலிபர், மாணவியிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.