கோவை: மாடியில் இருந்து விழுந்த கடை உரிமையாளர் பலி

83பார்த்தது
கோவை: மாடியில் இருந்து விழுந்த கடை உரிமையாளர் பலி
கோவை ஆர். எஸ். புரம் டி. வி. சாமி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அனுராக்(51). இவர் கணுவாயில் மார்பிள் கடை வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த அனுராக் முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அனுராக்கை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி