சூலூர்: கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

0பார்த்தது
சூலூர்: கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
சூலூரில் 55 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி (45) மற்றும் நாகராஜ் (45) ஆகிய இருவருக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் நேற்று 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகிக்கு கிடைத்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் நடத்திய சோதனையில் இவர்கள் பிடிபட்டனர்.

தொடர்புடைய செய்தி