கோவை: வாகன விபத்தில் தீயில் கருகிய வாலிபர்; பரபரப்பு வீடியோ

578பார்த்தது
கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் நேற்று அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார். நேற்று சில வடமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அப்பநாயக்கன்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. 

வாகனத்தில் இருந்த இளைஞர்களில் ஒருவர் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சூலூர் காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர், தீக்காயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி