கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் ஒரு வீட்டில் குளியலறைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட வீட்டினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், பாம்பை பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விடுவித்தார். இதனால் அப்பகுதியில் இருந்தோர் நிம்மதி அடைந்தனர்.