கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று தெரிவித்தார். அனைத்து அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், குடிநீர் பிரச்சினைகள் வராமல் வாரந்தோறும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், சுல்தான்பேட்டை பிஏபி வாய்க்கால் உடைப்பு உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், சேதமடைந்த பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு அரசின் நிதியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.