சென்னை: நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை - எஸ்.பி. வேலுமணி

7பார்த்தது
சென்னை: நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை - எஸ்.பி. வேலுமணி
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி. வேலுமணி, எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். கட்சியின் தோல்வியை ஆராய வேண்டும், பொதுக்குழுக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்தோம். பொதுச் செயலாளரும் ஒன்றொன்றாக நிறைவேற்றுவதாக தெரிவித்தார். நாங்கள் அனைவரும் ஒரே கட்சியில்தான் இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது. கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது. நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை. சி.வி. சண்முகமும் எங்களுடன் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.