
நேபாள சிலம்பப் போட்டியில் கோவை மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
கோவை மோகன்ஸ் அகாடமி மாணவர்கள் நேபாளத்தில் நடைபெற்ற இண்டோ-நேபாள் இன்டர்நேஷனல் சிலம்ப சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் பங்கேற்று சிறப்பான சாதனை படைத்துள்ளனர். 18 மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிலம்பம் மற்றும் தடகள பயிற்சி அளிக்கும் இந்த அகாடமி, கடந்த 8 ஆண்டுகளாக 1200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. மாநில, தேசிய போட்டிகளில் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இரவு கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



































