கோவையில் வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

67பார்த்தது
கோவையில் வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
கோவை சாயிபாபா காலனியை சேர்ந்தவர் வினோத் (38). இவர் சம்பவத்தன்று சாயிபாபா காலனி சேர்மன்ராஜ் நகரில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வினோத்திடம் தகராறு செய்தனர். அதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி வினோத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

இது குறித்து வினோத் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கையில், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சாயிபாபா காலனி சேர்மன்ராஜ் நகரை சேர்ந்த மோகன்ராஜ் (30), பரத் (26) மற்றும் பரத்குமார் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி