அமெரிக்காவில் பணிபுரியும் ஸ்ரீநிஷாந்த், திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளார். ஆட்டோவில் பயணித்தபோது அதீத மதுபோதையில் மயங்கிய அவரை, ஆட்டோ ஓட்டுநர் ஷபீர் அகமது தனது நண்பர் வீட்டில் இறக்கிவிட்டு, சவாரிக்காக 8,000 ரூபாய் பெற்றுள்ளார். பின்னர், ஸ்ரீநிஷாந்தின் 4 சவரன் செயின், பணம் திருடு போனது தெரியவந்தது. பட்டினப்பாக்கம் போலீசார் ஷபீர் அகமதுவை கைது செய்து, திருடிய நகையை உருக்கி வைத்திருந்த 30 கிராம் தங்கக் கட்டியை பறிமுதல் செய்தனர்.