கோவை, மேட்டுப்பாளையம் மதீனா நகர் பகுதியில் இன்று சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிக் கொண்டிருந்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற NWCT நிறுவனர் ஒயிட் பாபு மற்றும் சின்ராசு உஸ்மான் ஆகியோர், பொதுமக்களின் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பத்திரமாகப் பிடித்தனர். பின்னர், பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.