கோவைப்புதூர் ரிங் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது நல்ல பாம்பு ஏறி நின்ற சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை குறுக்கே சென்ற பாம்பைக் கண்டு பயந்த ஓட்டி வாகனத்தை நிறுத்தி ஓடினார். பின்னர் பாம்பு பைக்கின் முன்பகுதியில் ஏறி தலையை உயர்த்தி நீண்ட நேரம் நின்றது. இதைக் கண்ட வழிப்போக்கர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பின்னர் பாம்பு புதருக்குள் சென்றது. வனப்பகுதி சாலைகளில் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.