கோவை: மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

58பார்த்தது
கோவை: மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து
கோவை அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் உள்ள எலும்பியல் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவில், இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி விழுந்தது. இந்த சம்பவத்தில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவரின் உறவினருக்கு தலையில் விழுந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மழையின் காரணமாக மேற்கூரை விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை அவசரப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி